கேலி செய்தால் கடும் தண்டனை! அமீரக பொதுமக்களுக்கு எச்சரிக்கை
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த தவறான தகவல்களை அல்லது வதந்திகளை வெளியிடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அத்துடன் அமீரகத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை கேலி செய்வது குறித்தும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
நாட்டில் செயல்படுத்தப்பட்டுள்ள கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை கேலி செய்யும் சில சமூக ஊடக பதிவுகளைக் கண்டறிந்தமையை அடுத்தே இந்த தண்டனையை அமீரகத்தின் அவசரநிலை, நெருக்கடி ஆணையகம் அறிவித்துள்ளது.
இந்த குற்றங்களுக்காக குறைந்தபட்சம் ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் மற்றும் 100,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படலாம் என்று அமீரக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தவறான செய்திகள் அல்லது வதந்திகள் அரச அதிகாரிகளுக்கு எதிராக பொதுமக்களின் கருத்தை தூண்டுவோருக்கு குறைந்தது இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 200,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படலாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 6 மணி நேரம் முன்
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam