அவுஸ்திரேலிய நீதிமன்றம் தமிழர் ஒருவருக்கு பிறப்பித்துள்ள உத்தரவு
தற்காலிக விசாவிலிருந்தபடி சொத்துக்களை வாங்கி அவுஸ்திரேலியாவின் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் தமிழர் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றம் இரண்டரை லட்சம் டொலர்கள் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு தற்காலிக விசாவுடன் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த பாலசுப்ரமணியன், 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கும் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குமிடையில் பல சொத்துக்களை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சொத்துக் கொள்முதல்கள் குறித்து, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீளாய்வுச் சபையிடமிருந்து (Foreign Investment Review Board) அனுமதி பெறாத காரணத்தினால், பாலசுப்ரமணியன், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான சொத்துக் கொள்முதல் சட்ட விதிகளை ஆறு தடவைகள் மீறியுள்ளதாக அவுஸ்திரேலிய வரித்திணைக்களத்தினால், (ATO) நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது குறித்த வழக்கினை விசாரித்த பெடரல் நீதிமன்ற நீதிபதி சட்டவிரோதமாக வாங்கப்பட்ட சொத்துக்களின் மூலதன ஆதாயமான (capital gain) ஏழு லட்சத்து 31 ஆயிரத்து 300 டொலர்களில், இரண்டரை லட்சம் டொலர்களை அபராதமாகச் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 14 மணி நேரம் முன்
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan