விண்ணில் ஏவப்பட்ட 14 வினாடிகளில் வெடித்துச் சிதறிய ரொக்கெட்
அவுஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட முதல் சுற்றுப்பாதை ரொக்கெட், அதன் முதல் சோதனை ஏவுதலின் போது ஏவப்பட்ட 14 வினாடிகளுக்குப் பின் விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கில்மோர் ஸ்பேஸ் டெக்னாலஜிஸால் ஏவப்பட்ட எரிஸ் ரொக்கெட், வேகத்தை இழந்து மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு முதல் எட்டு மாதங்களுக்குள்
கரும்புகையை கக்கியபடி விண்ணில் சீறிப்பாய்ந்த அந்த ரொக்கெட் 14 நொடிகளில் வானில் பறந்து கொண்டிருந்தபோதே வெடித்து சிதறியுள்ளது.
❗️#Breaking: Australia's first homegrown orbital rocket lifted off and crashed 20 seconds later.🚀🇦🇺@GilmourSpace's Eris rocket made it just 50 meters before slamming into the ground.
— OrbitalToday.com (@SpaceBiz1) July 29, 2025
What went wrong & why is the CEO still happy?👇https://t.co/1QFeiBmnH4 pic.twitter.com/YDKfdGdwVZ
குறித்த நிறுவனம் வெளியிட்ட எழுத்து பூர்வ அறிக்கையில், யாரும் காயமடையவில்லை என்றும், ஆறு முதல் எட்டு மாதங்களுக்குள் இரண்டாவது ஏவுதல் நடைபெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



