ஜனாதிபதி அநுரவை அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சந்திக்கலாமென எதிர்பார்ப்பு
அவுஸ்திரேலிய கவர்னர் ஜெனரல் (ஆளுநர் நாயகம்) சமந்தா ஜோய் மோஸ்டின் இன்று இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்கிறார்.
அவர் எதிர்வரும் 10ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இருதரப்பு கலந்துரையாடல்
இந்த விஜயத்தின் போது, சமந்தா ஜோய் மோஸ்டின், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் அவர், பண்டாரகம, மிரிஸ்ஸ மற்றும் வெலிகம ஆகிய இடங்களில் அவுஸ்திரேலியாவால் நிதியளிக்கப்படும் பல திட்டங்களையும் பார்வையிடுவார்.

ஒத்துழைப்பை வலுப்படுத்தல்
இந்த நிலையில், சமந்தாவின் விஜயம் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதையும், இரு நாடுகளின் பரஸ்பர நன்மைக்காக தற்போதுள்ள ஒத்துழைப்புப் பகுதிகளை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam