இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை
அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய எண்ணும் இலங்கையர்கள் ஒருபோதும் நுழைய முடியாது என இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஆணையர் பால் ஸ்டீபன்ஸ் எச்சரித்துள்ளார்.
எனவே ஆட்கடத்தல் செயற்பாடுகளை கட்டுப்படுத்த இலங்கை அரசும், அவுஸ்திரேலிய அரசும் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் அவுஸ்திரேலிய உயர் ஆணையர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த ஆண்டு இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சூழலில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த நிலையில் இவ்வாறு சென்ற பலர் இலங்கை கடற்படையினராலும், அவுஸ்திரேலிய படையினராலும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
வழங்கப்பட்டுள்ள ஆலோசனை
இவ்வாறான ஆட்கடத்தல் சிக்கல் புதிய ஒன்றல்ல எனவும் பல ஆண்டுகளாக இருக்கும் பிரச்சினை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கையிலிருந்து எந்த படகுகளும் அவுஸ்திரேலியாவை வந்தடையவில்லை. எந்த சட்டவிரோத குடியேறியும் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவை வந்தடையவில்லை,” என்றும் அவர் கூறியுள்ளார்.
எனவே அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோருபவர்களுக்கு ஐ.நா. அகதிகள் முகமை வழியாக
விண்ணப்பங்கள் பரிசீலிக்கும் மனிதாபிமான குடியமர்த்தல் திட்டம் நடைமுறையில்
இருப்பதாகவும் ஆஸ்திரேலிய உயர் ஆணையர் ஸ்டீபன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

40 வயதுக்கு மேல் திருமணம் செய்துகொண்டது ஏன்?- உண்மையில் எனது வயது 44 இல்லை, நடிகை ஓபன் டாக் Cineulagam

இது ரகசியமாக இருக்கட்டும்... லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழரின் அருவருக்க வைக்கும் பின்னணி News Lankasri
