இலங்கையர்களிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள புதிய நோய் பரவல்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் ஒருவர் மாத்திரமே லிஸ்டீரியா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் ஊடக அழைப்பாளர் டொக்டர் நவின் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.இதன்போது அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
சமூக வலைத்தளங்களில் வெளியாகும் சில விடயங்கள் உண்மையல்ல எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, இரண்டு நோயாளர்கள் லிஸ்டீரியா நோயால் உயிரிழந்த தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், அந்த நோயாளிகள் லிஸ்டீரியா நோயால் பாதிக்கப்பட்டவர்களா என்பது தெரியவில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
நோய் அறிகுறிகள்
மேலும், இது தொடர்பில் விசேட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உணவின் மூலம் லிஸ்டீரியா நோய்த்தொற்று ஏற்படுவதுடன் வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி மற்றும் காய்ச்சல் போன்றவை இதன் அறிகுறிகளாக இருக்கலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் சிலருக்கு லிஸ்டீரியா நோய் தாக்கிய பிறகு கோமா உருவாகலாம் என்றும், எவ்வாறாயினும், இந்த நோயைத் தடுக்க கைகளை கழுவுதல் மற்றும் சரியான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது போதுமானது என்றும் வைத்தியர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

40 வயதுக்கு மேல் திருமணம் செய்துகொண்டது ஏன்?- உண்மையில் எனது வயது 44 இல்லை, நடிகை ஓபன் டாக் Cineulagam

இது ரகசியமாக இருக்கட்டும்... லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழரின் அருவருக்க வைக்கும் பின்னணி News Lankasri
