கொழும்பில் உயர் மாடி கட்டடத்திலிருந்து விழுந்து இறந்த வெளிநாட்டு பிரஜை
கொழும்பின் உயர் மாடி கட்டிடமொன்றில் இருந்து அவுஸ்திரேலிய பிரஜை ஒருவர் கீழே குதித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
குறித்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை (03.12.2024) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
அலெக்சாண்டர் என்று அழைக்கப்படும் 51 வயதுடைய குறித்த அவுஸ்திரேலிய பிரஜை, தவறான முடிவெடுப்பதற்கு முயற்சித்து கட்டிடத்தின் முன்பாகத்தில் நின்று ஆங்கில வார்த்தைகளில் மிகவும் ஆக்ரோஷமான முறையில் கத்தியுள்ளார்.
தோல்வியடைந்த பொலிஸாரின் முயற்சி
இதனையடுத்து, அவரை காப்பாற்ற முயன்ற கொள்ளுப்பிட்டி பொலிஸார், அவரின் அறைக் கதவை உடைத்து அவரை பிடித்து தடுக்க முயற்சித்தனர்.
எனினும், பொலிஸாரை தாக்கிய குறித்த நபர், கட்டிடத்தில் இருந்து தலைகீழாக குதித்துள்ளார். கீழே விழும் போது, கட்டிடத்தின் மற்றுமொரு சுவரில் அவரின் தலை பலமாக மோதியுள்ளது.
இந்நிலையில், அவரை உடனே கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு பொலிஸார் அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து, ஒன்றரை மணிநேரத்திற்கு பின்னர் அவர் இறந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |