வரலாற்றுச் சாதனை படைத்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி

Rukshy
in கிரிக்கெட்Report this article
அவுஸ்திரேலிய அணி 3 ரி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஸ்கொட்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் ரி20 போட்டி நேற்று (04) நடைபெற்றது.
இதன்போது நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி பந்து வீச்சைத் தெரிவு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி 20 ஓவர் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
பவர் பிளேயில் அதிக ஓட்டங்கள்
இதனையடுத்து பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 9.4 ஓவரில் 155 ஓட்டங்களைப் பெற்று 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், ரி20 கிரிக்கெட்டில் பவர் பிளேயில் அதிக ஓட்டங்கள் விளாசிய அணி என்ற வரலாற்றுச் சாதனையை அவுஸ்திரேலிய அணி படைத்துள்ளது.
குறித்த சாதனையானது டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஷ் இணை ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் படைக்கப்பட்டது.
அரைச்சதம்
இந்நிலையில், 5ஆவது ஓவரில் மிட்செல் மார்ஷ் 30 ஓட்டங்களையும் 6ஆவது ஓவரில் டிராவிஸ் ஹெட் 26 ஓட்டங்களையும் அதிகபட்சமாக குவித்தனர்.
குறிப்பாக 17 பந்துகளில் அரைச்சதம் விளாசிய ஹெட் 25 பந்துகளில் 80 ஓட்டங்களை அணிக்காக அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.
இதன்மூலம் 3 போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் அவுஸ்திரேலிய அணி 1:0 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

தமிழகத்தில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள அஜித்தின் குட் பேட் அக்லி.. எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
