அவுஸ்திரேலியாவில் சாதனை படைத்த இலங்கை பெண்
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேச கேக் போட்டியில் அங்கு வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த பொறியியலாளர் நிஷா பொல்ஹேனா முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
பிரிஸ்பேனில் கடந்த 12ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை நடைபெற்ற இந்தப் போட்டித் தொடரில் 25 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
பல துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டியில் கதைசொல்லல் பிரிவில் நிஷா பொல்ஹேன தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
கேக் வடிவமைப்பு
தனது வெற்றியைப் பற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், போட்டி மிகவும் சவாலானது. சிட்னியில் இருந்து பிரிஸ்பேனுக்கு வரவிருந்ததாகவும், அத்துடன் தட்பவெப்ப நிலைகள் கேக் வடிவமைப்பை மிகவும் சவாலானதாக மாறியதாகவும் குறிப்பிட்டார்.
புகழ்பெற்ற எலிஸின் வொண்டர்லேண்ட் கதையை அடிப்படையாகக் கொண்ட நிஷா பொல்ஹேனின் கேக் வடிவமைப்பு Down the Rabbit Hole – An Alice Adventure என்று பெயரிடப்பட்டது.
எலிஸின் சாகசங்களை விரிவாகவும் ஆக்கப்பூர்வமாகவும் படம்பிடித்து கதை சொல்லும் வகையில் கேக்குகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தனிப்பட்ட சாதனை
இது தனிப்பட்ட சாதனை மட்டுமன்றி அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கையர்களின் கேக்குகளை அலங்கரிக்கும் திறமைக்கு வலுவான சான்றாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொழிலில் பொறியியலாளர் நிஷா பொல்ஹேன பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதோடு 5 வருடங்களாக கேக் தயாரிப்பை பொழுதுபோக்காக மேற்கொண்டு வருகிறார்.