போர்டர்-கவாஸ்கர் கிண்ணத்தை சுவீகரித்த அவுஸ்திரேலியா: செம்பியன்சிப் இறுதிக்கும் தகுதி
சுற்றுலா இந்திய அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையில் நடைபெற்ற ஐந்து போட்டிகளை கொண்ட டெஸ்ட் கிரிக்கட் தொடரில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி, போர்டர்-கவாஸ்கர் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.
இன்று சிட்னியில் முடிவடைந்த இறுதி ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை அவுஸ்திரேலிய அணி, 6 விக்கட்டுக்களால் தோற்கடித்தன் மூலம் இந்த கிண்ணத்தை 8 வருடங்களின் பின்னர் சுவீகரித்துள்ளது.
Ready to defend their World Test Championship mace 👊
— ICC (@ICC) January 5, 2025
Australia qualify for the #WTC25 Final at Lord's 🏏
More 👉 https://t.co/EanY9jFouE pic.twitter.com/xcpTrBOsB8
ஐசிசி டெஸ்ட் செம்பியன்சிப்
அத்துடன் 2025ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி டெஸ்ட் செம்பியன்சிப் இறுதிப்போட்டியிலும் தென்னாபிரிக்க அணியுடன் போட்டியிட அவுஸ்திரேலிய அணி தகுதிப்பெற்றுள்ளது.
ஏற்கனவே இரண்டு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற நான்கு போட்டிகளில் 2இல் அவுஸ்திரேலியாவும், ஒன்றில் இந்தியாவும் வெற்றி பெற்றிருந்தன.
எனவே வெற்றியை சமநிலைப்படுத்தி, கிண்ணத்தை பறிகொடுக்காமல், பகிர்ந்துக்கொள்ள ஐந்தாவது போட்டியில் இந்திய அணியின் வெற்றி அவசியமாக இருந்தது.
பின்னடைவான துடுப்பாட்டம்
எனினும் இந்திய அணியின் பின்னடைவான துடுப்பாட்டம், அந்த கிண்ணத்தை அவுஸ்திரேலிய அணிக்கு 3இற்கு ஒன்று என்ற வெற்றியின் மூலம் வழங்கியுள்ளது.
இன்று முடிவடைந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, தமது முதல் இன்னிங்ஸில் 185 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 157 ஓட்டங்களையும் பெற்றது
அவுஸ்திரேலிய அணி, தமது முதல் இன்னிங்ஸில் 181 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களையும் பெற்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |