சாம்பியனை விரட்டியடித்த அவுஸ்திரேலியா!(Video)
இங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.
இந்த போட்டி அவுஸ்திரேலியாவின் அடிலைய்ட் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 287 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
288 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
288 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 46.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 291 ஓட்டங்களைப் பெற்று ஆறு விக்கெட்டுக்களால் வெற்றியை தனதாக்கியுள்ளது.
இங்கிலாந்து அணி சார்பாக தனித்து நின்று போராடிய டேவிட் மலான், 134 ஓட்டங்களைப் பெற்றதுடன், போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரின் 2 ஆவது போட்டி சிட்னி மைதானத்தில் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 21 மணி நேரம் முன்

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
