சிட்னியில் உயிரிழந்த 17 வயதான இலங்கை சிறுவன்! குடும்பத்தார் வெளியிட்டுள்ள உருக்கமான தகவல்
அவுஸ்திரேலியாவில் இலங்கையை சேர்ந்த 17 வயதான மாணவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த விபத்து கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் பிறந்த 17 வயதுடைய கல்வின் விஜயவீர என்ற மாணவனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

குடும்பத்தார் எழுப்பிய கேள்விகள்
குறித்த மாணவன் சிட்னியின் வடமேற்கில் உள்ள கார்லிங்போட்டில் உள்ள பாடசாலைக்கு சக மாணவர்களுடன் வானில் சென்றுகொண்டிருந்த போது விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியாகியுள்ளதுடன்,மற்றுமொரு மாணவன் தலையில் அடிப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த இலங்கை குடும்பத்தினர் கடந்த 2008ல் கொழும்பில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

இதேவேளை, 90 வயது பெண் ஒருவர் செலுத்திய வாகனத்தில் மோதுண்டே குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதுடன், 90 வயதான நபரை எவ்வாறு பபொலிஸார் வாகனம் செலுத்த அனுமதித்தனர் எனவும் குடும்பத்தார் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது குறித்து உயிரிழந்த கல்வின் சகோதரி கூறுகையில், நான் கூறவருவது வெறுப்பு உணர்வுகள் அல்ல, 90 வயதான ஒரு பெண்ணை எப்படி வாகனம் ஓட்ட அனுமதிக்க முடியும்?
நியூ சவுத் வேல்ஸில், 75 வயதுக்கு மேற்பட்ட ஓட்டுநர்கள் தங்கள் உரிமத்தை வைத்திருக்க ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ மதிப்பீட்டைக் கொண்டிருக்க வேண்டும்.
85 வயதுக்கு பிறகு அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 'ஆன்-ரோடு' ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri