செம்பியன்ஸ் டிரொபி: இங்கிலாந்தை வீழ்த்தி அவுஸ்திரேலியா அபார வெற்றி
அவுஸ்திரேலியா(Australia) மற்றும் இங்கிலாந்து(England) அணிகளுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
செம்பியன்ஸ் டிரொபி தொடர் பாகிஸ்தான்(Pakistan) மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் இன்று(22) நடைபெற்ற போட்டியில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின.
இங்கிலாந்து அணி
நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலிய அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 351 ஓட்டங்கள் குவித்தது.
இங்கிலாந்து சார்பில் பென் டக்கெட் சதமடித்து 165 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஜோ ரூட் அரை சதம் கடந்து 68 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அவுஸ்திரேலியா சார்பில் பென் துவார்ஷியஸ் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதையடுத்து, 352 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அவுஸ்திரேலிய அணி களமிறங்கியது.
அவுஸ்திரேலியா அணி
தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஷார்ட் அரை சதம் கடந்து 63 ஓட்டங்களில் ஆட்டமிழக்க அலெக்ஸ் கேரி 69 ஆட்டமிழந்து வெளியேறினார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் லபுசேன்47 ஓட்டங்களில் வெளியேறினார்.
ஜோஷ் இங்கிலிஸ்(Josh Inglis) அதிரடியாக ஆடி சதம் கடந்ததுடன் இறுதிவரை நின்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், அவுஸ்திரேலிய அணி 47.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 356 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
ஜோஷ் இங்கிலிஸ் 120 ஓட்டங்களும், மேக்ஸ்வெல் 32 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |