மாணவர் விசா கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மற்றுமொரு நாடு
சர்வதேச மாணவர்களுக்கான விசா விதிமுறைகளை கடுமையாக்குவதாக அவுஸ்திரேலியா உள்துறை அமைச்சர் “கிளேர் ஓ'நீல்“ (Clare O’Neil) அறிவித்துள்ளார்.
இதற்கமைய புதிய விதிமுறைகளின்படி சர்வதேச மாணவர்கள் அவுஸ்திரேலியாவில் கல்வி கற்க வேண்டுமாயின் ஆங்கிலப் பரீட்சைகளில் அதிக புள்ளிகளை பெற வேண்டும் என்ற நிபந்தனை முன்வைக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர்வோரின் எண்ணிகையை குறைக்கும் நோக்கிலே இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2022 முதல் 2023 வரை 510,000 குடியேற்றங்கள் பதிவாகியதுடன் அடுத்து வரும் ஆண்டுகளில் அதனை பாதியாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக சர்வதேச மாணவர்களே அவுஸ்திரேலியாவில் புலம்பெயர் குடியேற்றங்களின் எண்ணிக்கை உயர்வுக்கு முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதையடுத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் வீடற்றவர்களின் எண்ணிக்கை
இவ்வாறு அதிகரிக்கப்பட்ட புலம்பெயர் குடியேற்றங்களால் அவுஸ்திரேலியாவில் வீடற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அண்மையில் அவுஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட பத்திரிகை ஆய்வொன்றில் 62 சதவீத அவுஸ்திரேலிய வாக்காளர்கள் நாட்டின் குடியேற்றம் மிக அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை மாணவர் விசா மட்டுமன்றி தொழிலாளர் விசாக்களிலும் குறிப்பாக அவர்களின் வேலை நேரம் தொடர்பிலும் மீள் பரிசீலனை செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
கடந்த வாரம் பிரித்தானியாவும் புலம்பெயர் குடியேற்றங்களின் எண்ணிக்கையை குறைக்க கடுமையான விசா நடைமுறைகளை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
