வோர்ன் - முரளி கிண்ண கிரிக்கட்டின் முதல் போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் அவுஸ்திரேலியா
சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான வோர்ன்- முரளி கிண்ண டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி, ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.
அவுஸ்திரேலிய அணி, தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில் இரண்டாம் நாளான இன்று, 6 விக்கட்டுக்களை இழந்து 654 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டு, இலங்கை அணிக்கு வாய்ப்பை வழங்கியது.
துடுப்பாட்டத்தில் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உஸ்மான் கவாஜா 232 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
ஆதிக்கம் செலுத்தும் அவுஸ்திரேலியா
தலைவர் ஸ்டீவ் ஸ்மித் 141 ஓட்டங்களையும், இங்க்லிஸ் 102 ஓட்டங்களை பெற்றனர்.

பந்துவீச்சில் இலங்கை அணியின் பிரபாத் ஜயசூரிய 3 விக்கட்டுக்களையும், ஜெப்ரி வெண்டசே 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து இ;ன்றைய இரண்டாம் நாள் நிறைவடையும் போது தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிக்கொண்டிருந்த இலங்கை அணி 3 விக்கட்டுக்களை இழந்து 44 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இதில் ஓஸத பெர்ணான்டோ,திமுத் கருணாரட்ன மற்றும் எஞ்சலோ மெத்தியூஸ் ஆகியோர் தலா 7 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்தனர் தினேஸ் சந்திமல் ஆட்டமிழக்காமல் 9 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 13 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam