அவுஸ்திரேலியாவில் 80 வீத தடுப்பூசிகள் இலக்கு எட்டப்பட்டுள்ளது
அவுஸ்திரேலியாவில் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 80 சதவீதமாக உயா்ந்துள்ளது என்று பிரதமர் ஸ்கொட் மொரிசன் (Scott Morrison) இன்று தெரிவித்தார்.
நாட்டில் 16 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் 80 சதவீதமானோர் இப்போது கோவிட் 19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனா் என்று பிரதமர் கூறினார்.
தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளாதவா்கள், விரைவில் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டால், பாதுகாப்பாக மீண்டும் எல்லைகளைத் திறக்க முடியும் என்று பிரதமா் குறிப்பிட்டாா்.
இதற்கிடையில், தொற்றுக்களை விரைவில் கண்டறியக் கூடிய அன்டிஜன் சோதனைகள் செய்வது குறித்த ஒரு நாடளாவிய திட்டம் ஒன்றை அவுஸ்திரேலிய அரசாங்கம் தயாாித்துள்ளது.
இதற்கு நாட்டின் தேசிய அமைச்சரவை ஆதரவு வழங்கியுள்ளது.