இலங்கைக்கு பெருந்தொகை டொலர்களை ஈட்டிக்கொடுக்க விசேட திட்டம்
நாட்டிற்கு டொலர்களை சம்பாதிப்பதற்காக HASS வகைகளை கொண்ட அவுஸ்திரேலிய வெண்ணெய் பழம் ( avacado fruit) இலங்கையில் விவசாய கைத்தொழில் பயிராக விரிவுபடுத்தவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு நிதியில் செயல்படுத்தப்படும் திட்டமான விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வெண்ணெய் பழத்திட்டத்தின் முதற்கட்டமாக பதுளை மாவட்டத்தில் 200 ஏக்கர் காணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இனத்தின் மரக்கன்றுகள் அவுஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு பண்டாரவளை பிரதேசத்தில் நடப்பட்டுள்ளது.

வெண்ணெய் பழத்தின் சிறப்பு
HASS வெண்ணெய் பழம் வகையின் சிறப்பு என்னவென்றால், பழங்கள் மற்றும் வெண்ணெய் கூழ் ஆகியவற்றைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் ஆரோக்கியத்திற்கு உகந்த வெண்ணெய் எண்ணெய்க்கு சர்வதேச சந்தையில் அதிக தேவை உள்ளது என்று விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த விவசாயத்துறை நவீனமயமாக்கல் திட்டத்திற்கு பதுளை மாவட்டத்தில் விவசாயம் செய்யக்கூடிய சுமார் 1000 குடும்பங்களை தெரிவு செய்துள்ளதுடன், அவர்களுக்கு HASS வெண்ணெய் இனத்தை வளர்ப்பதற்கு தேவையான அனைத்து தொழில்நுட்பம், செடிகள் மற்றும் நிதியுதவி வழங்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
மூன்று வருடங்களில் இந்த பழத்தின் மூலம் வருமானம் ஈட்ட முடியும் மற்றும் ஒரு மரத்தில் 200 கிலோ வெண்ணெய் பழம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 8 மணி நேரம் முன்
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan