5000 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படும் இலங்கை பெண்கள்
தாய்லாந்தில் தொழில் பெற்று தருவதாக கூறி அழைத்து செல்லப்பட்ட இலங்கை பெண்கள் தலா 5ஆயிரம் டொலர்களுக்கு சீனர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.
விற்கப்பட்ட சீனர்களிடம் இருந்து தப்பிச் சென்றதாக தாய்லாந்து பொலிஸ் காவலில் இருந்த குறித்த பெண்கள் விடுவிக்கப்பட்டு நேற்று இந்நாட்டிற்கு வந்துள்ளனர்.
ருவான் பத்திரன என்பவரின் மகன் என கூறப்படும் நபரே இவ்வாறு தம்மை விற்பனை செய்ததாக நாடு திரும்பிய பெண்கள் ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளனர்.
சீனர்களின் தொழிற்சாலைகளில் எங்களை சித்திரவதைக்குட்படுத்தி வேலை செய்ய வைத்தார்கள். வெயிலில் நிற்க வைப்பார்கள். வெயிலில் ஓடச் சொல்லுவார்கள். மின்சாரம் பாய்ச்சினார்கள்.சுமார் ஒரு மாத காலம் உணவின்றி அறையில் அடைத்து வைத்தார்கள்.
இலங்கைக்கு அனுப்புவதற்கு 5000 டொலர்களை செலுத்துமாறு கூறியதாகவும் யுவதிகள் தெரிவித்துள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி கட்சியின் அம்பலாந்தோட்டை உள்ளுராட்சி மன்ற வேட்பாளர் அனுர சேனாரத்னவின் அலுவலகத்தில் இருந்து ருவான் பத்திரன என்ற மொழிபெயர்ப்பாளர் பணத்திற்கு பெண்களை கடத்துவதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட சுற்றிவளைப்பு குழுவினர் ஹம்பாந்தோட்டை நீதிமன்றில் கடந்த 6ஆம் திகதி இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளனர்.
ருவன் பத்திரன என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். தற்போது வீட்டில் இருந்து காணாமல் போயுள்ள பிரதான கடத்தல்காரன் என கூறப்படும் அனுர சேனாரத்னவை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த கடத்தல் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கும் 15 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
கடத்தல்காரர்களிடம் சிக்கி தாய்லாந்தில் அவதிப்பட்டு வந்த இருபது வயதுடைய நான்கு யுவதிகள் மற்றும் சிறுமிகள் நேற்று காலை இலங்கை வந்தடைந்தனர். அவர்கள் அம்பலந்தொட்ட பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் அவர்களில் மூவர் ஒரே குடும்பத்தின் உறவினர்கள் என கூறப்படுகின்றது.

பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு - க்வார் அணையை முடிக்க இந்தியா ரூ.3,119 கோடி கடன் பெற முடிவு News Lankasri

மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கவுள்ள Rare Earth Magnets - சீனாவிற்கு எதிரான இந்தியாவின் தற்சார்பு முயற்சி News Lankasri
