ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட சுபவேளை குறிப்பு பத்திரம்
தமிழ் சிங்கள புத்தாண்டுக்கான சுபவேளை குறிப்பு பத்திரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சம்பிரதாய முறைப்படி கையளிக்கப்பட்டுள்ளது.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அரச சுபநேர கணிப்பு குழுவினால் தயாரிக்கப்பட்ட சுபவேளை குறிப்பு பத்திரமே இவ்வாறு ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று (10.04.2024) கையளிக்கப்பட்டுள்ளது.
இதனை புத்தசாசன, சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க சம்பிரதாய முறைப்படி ஜனாதிபதிக்கு வழங்கி வைத்துள்ளார்.
சுப காரியங்கள்
புத்தாண்டு பிறப்பு, புண்ணிய காலம், உணவு சமைத்தல், அடுப்பு பற்றவைத்தல், உணவு உண்ணல், தலைக்கு எண்ணெய் தேய்த்தல், புத்தாண்டில் வேலைக்கு புறப்பட்டு செல்லுதல் உள்ளிட்ட சுப காரியங்களுக்கான சுப நேரங்கள் மேற்படி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 9 மணி நேரம் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
