சொந்த மண்ணில் அவுஸ்திரேலியாவிடம் இன்னிங்ஸ் தோல்வியடைந்த இலங்கை அணி
சுற்றுலா அவுஸ்திரேலிய(Australia) அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான வோர்ன்-முரளி கிண்ண முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி, ஒரு இன்னிங்ஸ் மற்றும் 242 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது.
காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் இன்றைய நான்காம் ஆட்டத்தின்போது இலங்கை இந்த தோல்வியை சந்தித்தது.
போட்டியின் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 6 விக்கெட்டுக்களை இழந்து 654 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.
இலங்கை அணி
இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 165 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதனையடுத்து பொலோ ஒன் முறையில் மீண்டும் இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாட நிர்ப்பந்திக்கப்பட்ட இலங்கை அணி, 247 ஓட்டங்களை பெற்றிருந்தபோது அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவியது.
இரண்டாம் இன்னிங்ஸில் இலங்கை அணியின் ஜெப்ரி வெண்டசே அதிகமாக 53 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
முதல் இன்னிங்ஸில் தினேஸ் சந்திமல் 72 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
வீரர்களின் வேகமின்மை
இதேவேளை, காலியில் நடைபெற்ற சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில், அவுஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தின்போது, இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர்கள் மிகவும் மெதுவாக பந்து வீசியதாக முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் சைமன் கட்டிச் தெரிவித்துள்ளார்.
இலங்கை வீரர்களின் வேகமின்மை காரணமாகவே அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்கள், துடுப்பாட்டத்தில் அதிக ஓட்டங்களை பெறமுடிந்ததாக சைமன் கட்டிச் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தின்போது, அவுஸ்திரேலிய சுழல்பந்து வீச்சாளர்கள், இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சாளர்களை காட்டிலும் அதிக வேகத்தில் பந்துவீச்சில் ஈடுபட்டதாக கட்டிச் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய அணி
அவுஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸில் பிரபாத் ஜெயசூர்ய மற்றும் நிசான் பீரிஸின் சராசரி வேகம் முறையே மணிக்கு 80.8 கிலோ மீற்றர்களாகவும், ஜெஃப்ரி வான்டர்சேயின் வேகம் 83.4 கிலோ மீற்றர்களாகவும் இருந்தன.
எனினும் அவுஸ்திரேலிய அணியின் நேதன் லியோன் 89.7 கிலோமீற்றர் வேகத்திலும், மேத்யூ குஹ்னேமன் 89.1 கிலோமீற்றர் வேகத்திலும் பந்து வீசினர் இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சாளர்களின் வேகமற்ற பந்துவீச்சே அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்கள் தங்கள் கால்களைப் பயன்படுத்தி துடுப்பாட அனுமதித்து.
அதேசமயம் அவுஸ்திரேலியரின் வேகமான வேகம் இலங்கையின் துடுப்பாட்ட வீரர்கள் தங்கள் கால்களைப் பயன்படுத்தி துடுப்பாடுவதை சற்று கடினமாக்கியதாக முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் சைமன் கட்டிச் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |