ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை
தேர்தல் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட மியன்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு மேலும் மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவ் உத்தரவு அந்நாட்டு நீதிமன்றினால் இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியைத் தூண்டுவது, கரோனா விதிகளை மீறியது, அலுவல் ரீதியான சட்டங்களை மீறுதல், ஊழல் வழக்குகள் என்று ஆங் சான் சூச்சி மீது 11 குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வழக்குகள் தொடரப்பட்டன.
இராணுவ
சதிப்புரட்சிக்குப் பின்னர் தடுத்து வைக்கப்பட்டு ஏற்கனவே 17 ஆண்டுகளுக்கும்
மேலாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுகளை மறுக்கும் ஆங் சான் சூகி
எனினும் தன் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார்.
77வயதான சூகி, ஊழல் மற்றும் தூண்டுதல் முதல் உத்தியோகபூர்வ இரகசியங்கள் கசிவு வரை பல குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஒரு வருடத்திற்கும் மேலாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மூடிய அறைகளுக்குள் நடந்த விசாரணைகள்
அவரது விசாரணைகள் தலைநகரான நேபிடாவில் மூடிய அறைகளுக்குள் இடம்பெற்றன.
இந்தநிலையில் ஆளும் இராணுவக் குழுவின் பேச்சாளார், ஆன் சான் சூகிக்கு எதிரான தீர்ப்புக்கு தொடர்பாக கருத்துக்களை வெளியிடவில்லை.
எனினும் சூகிக்கு உரிய நடைமுறை வசதிகள் வழங்கப்படுவதாக இராணுவம் கூறியுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
