சுகாதாரத் துறைக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான கணக்காய்வு அறிக்கை
இலங்கையில் மாகாண நிர்வாகங்கள் ஒவ்வொரு வருடமும் சுகாதாரத் துறைக்கான வரவு செலவுத் திட்டத்தில் 50-60 வீதத்தை மட்டுமே பெற்றுக்கொள்வதாக தேசிய கணக்காய்வு அறிக்கை வெளிப்படுத்துகிறது.
இதனால், மாகாணங்களில் சிறந்த சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் வரையறுக்கப்பட்ட நிதி ஆதாரங்களை மாத்திரமே சார்ந்திருக்க வேண்டிய நிலையை இது ஏற்படுத்துகிறது.
சுகாதாரத் துறைக்கான 2,299 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு கிராமப்புற மற்றும் பெருந்தோட்ட மக்களின் பரவலைக் கருத்தில் கொள்ளாமல் ஒன்பது மாகாணங்களுக்கு பகிரப்பட்டுள்ளது.
தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் ஆய்வு
கிராமப்புற மருத்துவமனை மேம்பாட்டுக்கான மொத்த ஒதுக்கீடு 2021 ஆம் ஆண்டில் 5000 மில்லியன் ரூபாய்களாகும். எனினும் அதற்காக 3,350 மில்லியன் ரூபாய் மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் கண்டறிந்துள்ளது.
சுகாதாரத்துறையில் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டிற்காக ஆண்டுக்கு இரண்டு முறை தேசிய வழிகாட்டுதல் குழுக் கூட்டங்களை நடத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது, எனினும் இந்தக் கூட்டம் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நடைபெறவில்லை.
தேசிய சுகாதார சபை என்பது, சுகாதாரப் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க ஒரு முக்கியமான தளமாகும்.
எனினும் 2004 ஆம் ஆண்டிலிருந்து மிக உயர்ந்த மட்டத்தில் கூட்டப்படவில்லை.
இந்தநிலையில் நிதிப் பற்றாக்குறையால் நுண்ணுயிர் எதிர்ப்புத் திட்டம் எதிர்பார்த்த அளவில் செயல்படுத்தப்படவில்லை என்று கணக்காய்வு அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
