அட்டுலுகம சிறுமியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் குறித்து வெளியான மற்றுமொரு திடுக்கிடும் தகவல்
நாட்டை உலுக்கிய அட்டுலுகம சிறுமி ஆயிஷாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேநபர் குறித்து மற்றுமொரு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பெண் ஒருவரிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்த சந்தேகநபர்
இதன்படி, குறித்த சந்தேக நபர் இதற்கு முன்னரும் ஒரு பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்றதாக கூறப்படுகின்றது.
அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணே இவ்வாறான நிலைக்கு முகம்கொடுத்ததாகவும், இந்த சம்பவம் கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்றதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பெண் தங்கியிருந்த வீட்டிற்குள் இரகசியமாக பிரவேசித்த சந்தேக நபர், பெண்ணை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளார்.
சம்பவத்திற்கு முகம் கொடுத்த பெண்ணின் கருத்துப்படி,
“நான் முன்பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்தேன். நான் என் இரண்டு குழந்தைகளுடன் வீட்டில் இருக்கும் போது சந்தேகநபர் என்னை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சி செய்தார். நான் கத்தி கூச்சலிட்டதும் அவர் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
நான் பொலிஸிலும் முறைப்பாடு செய்திருந்தேன், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் இப்பேது ஆயிஷாவுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தி வெளியாகியுள்ளது”.
சிதைக்கப்பட்ட பிஞ்சுகள்! கொடூரத்தின் உச்சம் இதுவே(Video) |

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 21 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
