நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்திற்கு சட்ட மா அதிபர் அங்கீகாரம்
நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அங்கீகாரம் கிடைத்த பின்பே சபாநாயகர் அதில் கைச்சாத்திட்டு அங்கீகாரம் வழங்கியதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டமூலத்தை கடந்த வாரம் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளைக் கொண்டு நிறைவேற்றிக் கொண்டிருந்தது.
உச்ச நீதிமன்ற பரிந்துரைகள்
எனினும் சட்டமூலம் தொடர்பில் உச்ச நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்களை அரசாங்கம் புறக்கணித்துவிட்டதாக குற்றம் சாட்டிய எதிர்க்கட்சி, சட்ட மா அதிபரின் சம்மதம் கிடைக்கும் வரை சபாநாயகர் குறித்த சட்டமூலத்தில் கைச்சாத்திட்டு அங்கீகாரம் வழங்கக்கூடாது என்று வலியுறுத்தியிருந்தன.
மேலும், நிகழ்நிலை பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா நேற்று முன்தினம் கைச்சாத்திட்டு, அதனை நடைமுறைப்படுத்துவதற்கான அங்கீகாரம் வழங்கியிருந்தார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உறுதிப்படுத்தியதையடுத்து சபாநாயகர் அதில் கையொப்பமிட்டதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
3, 5, 7, 9, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 36, 37, 42, 45, 53 ஆகிய பிரிவுகளை தனிப்பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு 56வது சட்டப்பிரிவை நிறைவேற்றுவதாயின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்று உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
