மாம்பழ விலையை குறைக்க மறுத்த பெண் வர்த்தகரை தாக்கிய பொலிஸ் அதிகாரி
மாம்பழத்தின் விலையைக் குறைத்துத் தர மறுத்த பெண் வர்த்தகரை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தாக்கியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவம் அவிசாவளை - கொழும்பு பிரதான வீதியின் ஹங்வெல்ல பிரதேசத்தின் அருகே வனஹகொட பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
மாம்பழம் வாங்குவதற்காக வந்த, சீருடையில் இருந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் மாம்பழத்தின் விலையைக் குறைக்குமாறு பெண் வர்த்தகரை கடுமையான தொனியில் அச்சுறுத்தியுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்
எனினும், மாம்பழத்தின் விலையை குறைக்க மறுத்த நிலையில் மாம்பழம் மற்றும் விலைப்பட்டியல் பலகையைக் கொண்டு தன்னைத் தாக்கியதாக குறித்த பெண் வர்த்தகர் தெரிவித்துள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பில் ஹங்வெல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் தாக்குதலுக்கு இலக்கான பெண் வர்த்தகர் சாலாவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |