அம்பாறை மேல்நீதிமன்ற நீதிபதியை விடுவிக்குமாறு சட்டமா அதிபர் ஆலோசனை : பாதிக்கப்பட்ட தரப்பு எதிர்ப்பு
தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் குற்றமுறையான அச்சுறுத்தல் மற்றும் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி அந்தோனி ஜெயலக்ஷி டி. சில்வாவை விடுவிக்குமாறு கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
B/940/22 வழக்கு தொடர்பாக, பொலிஸார் சமர்ப்பித்த அறிக்கையில், சந்தேகநபருக்கு தண்டனைச் சட்டக்கோவையின் 486 மற்றும் 344 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு உட்படுத்தியபோது, பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் மேலதிக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
பொலிஸாருக்கு விடுக்கப்பட்ட உத்தரவு
அதில், சட்டமா அதிபர் ஆலோசனையின் அடிப்படையில் சந்தேகநபரை விடுவிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், சில குறைபாடுகள் இருப்பதால் நீதிமன்றம் பொலிஸாருக்கு இறுதி அறிக்கையை திருத்தி சமர்ப்பிக்க உத்தரவு வழங்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட தரப்பினை சார்ந்து சட்டத்தரணிகள் முன்வைத்து எதிர்ப்புக்களை அடுத்த விசாரணையில் முன்வைக்க ஒரு நாள் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீதிமன்றம் வழக்கை 2026 மார்ச் 30ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது, அடுத்த வழக்குத் தவணையில் பாதிக்கப்பட்ட தரப்பின் முன்னிலை மற்றும் சட்டவிவரங்கள் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹார்முஸ் நீரிணையை கடந்த இந்திய கப்பல்கள் - மறுப்பு தெரிவித்துள்ள ஈரான்! மும்பை வந்தடைந்துள்ள மற்றுமொரு கப்பல்
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri