ஹோர்முஸ் நீரிணையை மூடிய ஈரான்: உலக வர்த்தகத்தை அதிர்ச்சியடைய வைத்த எச்சரிக்கை
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளதுடன், அதன் ஊடாகப் பயணிக்க முயற்சிக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
ஈரானின் அதியுயர் தலைவர் அயதுல்லா அலி கொமேனி (Ayatollah Ali Khamenei) படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஈரான் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
ஈரானின் முக்கிய தீர்மானம்
ஈரான் ஆயுதப் படைகள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகள் மீது தொடர்ச்சியாகப் பழிவாங்கும் தாக்குதல்களை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், அப்பாதை வழியாக பயணிக்கும் கச்சா எண்ணெய், உர விநியோகம் உட்பட பல அத்தியாவச பொருட்கள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் பரவலாக வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ள நிலையில், அன்றாட வாழ்க்கை அதிக செலவுமிக்கதாக மாறி வருகிறது.
சிறகடிக்க ஆசை சீரியல்: சிந்தாமணியின் மகளிடம் காதலை சொல்லப்போகும் சத்யா.. துணை நிற்கும் முத்து! Cineulagam