ஆசிரியர் சங்கத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு
அதிபர், ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குமாறு கோரி வேலணையில் ஆசிரியர் சங்கத்தினர் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
தீவகக்கல்வி வலயத்தின் வேலணை கோட்டக் கல்விப் பணியகம் முன்பாக அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வினை வழங்கு, இருபத்து நான்கு வருடங்கள் கொள்ளையடித்த ஆசிரியர்களின் பணத்தை வழங்கு, இராணுவ மயமாக்கல் முன்பள்ளி கல்வி முறையை நீக்கு, சுபோதினி கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்து, இடைக்கால சம்பள முறையை ஒரே தடவையில் வழங்கும் இலவச கல்வியை பணத்துக்காக விற்காதே, இலவசக்கல்வி இடர்களை நீக்கு போன்ற கோஷங்களை எழுப்பி போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் (Theepan Thileesan) ஏற்பாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
கிளிநொச்சி
கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக அதிபர்,ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
குறித்த போராட்டம் இன்று பகல் 2 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றது.
நாடளாவிய ரீதியில் அதிபர், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் இன்று கிளிநொச்சி மாவட்டத்திலும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் சம்பள முரண்பாடுகளை அரசாங்கம் தீர்த்து வைக்க வேண்டும் எனவும், சுபோதினி ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அதிபர், ஆசிரியர்கள் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது பல்வேறு கோசங்களை எழுப்பியிருந்ததுடன், பதாதைகளையும் ஏந்தியிருந்தனர். தொடர்ந்து தமது பிரச்சினைகள் தொடர்பில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தனர்.









மிகப்பெரிய வரவேற்பு பெறும் காந்தாரா Chapter 1... முதல்நாள் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா? Cineulagam

கணவர் இறந்த பின்னரும் தாலியுடன் இருக்கும் பிரியங்கா- அவ்வளவு பிரியம்.. நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
