பிரான்ஸில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுடன் கவனயீர்ப்பு பேரணி (Photos)
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு 13ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பிரான்ஸ் நாட்டில் இன அழிப்பு நினைவேந்தல் நிகழ்வும், கவனயீர்ப்பு பேரணி ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
தமிழின அழிப்பு நினைவு நாளான இன்று பிரான்ஸ் நாட்டில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றதுடன், கடந்த யுத்தத்தில் 70,000 மக்கள் கொல்லப்பட்டதற்கும், 146679 பேர் காணாமலாக்கப்பட்டதற்கும் நீதிக்கோரி கவனயீர்ப்பு பேரணி ஒன்றும் இடம்பெற்றிருந்தது.
குறித்த பேரணி தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் இன்று மாலை
2.30 மணியளவில் பிரான்ஸ் நாட்டின் place De la RepubLique நகரில் ஆரம்பித்து
மாலை 6 மணியளவில் place De la baStille நகரில் முடிவடைந்தது.
குறித்த நிகழ்வில் பிரான்ஸ் நாட்டு மக்கள் மற்றும் புலம்பெயர் பிரான்ஸ் தமிழ்
உறவுகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan