சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மன்னாரில் கவனயீர்ப்பு பேரணி
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சமூக ரீதியில் பெண்கள் கொண்டிருக்கும் பொறுப்பு வாய்ந்த பங்களிப்பை வெளிப்படுத்தும் முகமாக மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு பேரணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு அதன் குழு தலைவர் ஜாட்சன்பிகிறா டோ தலைமையில் இன்று மன்னாரில் இடம் பெற்றுள்ளது.
விழிப்புணர்வுக்கு என பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட ஊர்தியில் சமூகத்தில் பெண்கள் பிரதி நிதித்துவப்படுத்தும் பொறுப்புக்களை ஒப்பனை செய்தவாறும், பெண்கள் தொடர்பான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் பேரணியாக மன்னார் நகரப்பகுதியை வந்தடைந்த குழுவினர் விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக பெண்கள் சார்ந்த சட்டங்கள் மற்றும் பெண்மையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் துண்டு பிரசுரங்களை பொது மக்களிடம் விநியோகித்ததுடன், பொது இடங்கள் மற்றும் பேருந்துகளிலும் காட்சிப்படுத்தியுள்ளனர்.
குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் இளைஞர்,யுவதிகள் சமூகசெயற்பாட்டாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.





மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri

வெளியேறிய நடிகை, ஆனால் மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஸ்பெஷல் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
