வன்முறைகளுக்கும் நீதி கோரி திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம்
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு நீதிகோரி திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை பெண்கள் எனும் அமைப்பினால் இன்று (24) அனுராதபுர சந்தியில் இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்பொழுது பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும் கடந்த காலங்களில் அமைச்சர் ஒருவரின் வீட்டில் வாழ்ந்து வந்த சிறுமிக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம் பெற்றதாகவும் மற்றும் துறவி ஒருவரினால் பெண் ஒருவருக்கு பாலியல் துஷ்பிரயோகம் நடத்தப்பட்டதாகவும் இவை அனைத்திற்கும் சிறந்த தீர்வினை வழங்க வேண்டுமெனவும் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு நியாயமான பதில்களை அரசாங்கம் வழங்க வேண்டும் எனக் கோரி இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இப்போராட்டத்தில் திருகோணமலையைச்சேர்ந்த 40க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.





லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam