அமெரிக்காவுக்கு விற்பனை செய்யப்பட்ட மின் நிலையம் : யாழ்ப்பாணத்தில் எதிர்ப்பு நடவடிக்கை
கெரவலப்பிட்டிய மின் நிலையத்தினை அமெரிக்காவுக்கு விற்பனை செய்தமைக்கு எதிராக யாழ்ப்பாண மின்சார சபை தலைமையக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதோடு கையெழுத்து பெறும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கெரவலப்பிட்டிய மின்நிலையத்தின் 40 வீத பங்கினை அமெரிக்காவுக்கு விற்பனை செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டணியினரின் ஏற்பாட்டில் இலங்கையின் அனைத்து இடங்களிலும் இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலக முன்றலில் இன்று மதியம் கையெழுத்து பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் பழைய பூங்காவி வீதியில் உள்ள இலங்கை மின்சார சபையின் தலைமை காரியாலய முன்றலில் இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பினரின் ஏற்பாட்டில் அமெரிக்காவிற்கு கெரவலப்பிட்டிய மின் நிலையத்தின் ஒரு பகுதி விற்பனை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.











பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
