மீண்டுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம்! கொழும்பில் போராட்டம்
மீண்டுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம் என தெரிவித்து கறுப்பு ஜூலை கலவரத்தை நினைவுகூர்ந்து கொழும்பில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கம் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
மனித உரிமை செயற்பாட்டாளரான அருட்தந்தை சக்திவேல் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் கத்தோலிக்க ஆயர்கள், பௌத்த பிக்குகள், சிவில் உரிமை செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் பங்கேற்றுள்ளனர்.
இதன்போது போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீண்டுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம், இனவாதம் வேண்டாம், தமிழ் மற்றும் முஸ்லிம்களின் கூட்டு உரிமைகளைப் பாதுகாக்கவும் எனக் கோரி பதாதைகளை ஏந்தி குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.


இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri