மன்னார் கடற்கரையில் கனிய மணல் அகழ்வுக்கு முயற்சித்தவர்கள் திருப்பி அனுப்பி வைப்பு
மன்னார் - பேசாலை 50 வீட்டு திட்ட கடற்கரையோர பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காணியில், கனிய மணல் அகழ்வுக்கான நில அளவை முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
இன்றைய தினம் (19.05.2025) மதியம் கனிய மணல் அகழ்வுக்கான நில அளவை முன்னெடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலையீட்டினால் குறித்த நடவடிக்கை கைவிடப்பட்ட நிலையில், நில அளவைக்கு என கொழும்பு தலைமையகத்தில் இருந்து வருகை தந்தவர்கள் திரும்பிச் சென்றுள்ளனர்.
மன்னார் பிரதேச செயலாளரினால் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் அனுமதியும், நீரியல் வளத்துறை திணைக்களத்தின் அனுமதியும் பெற்றுக் கொண்டு நில அளவை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதும், அதற்கு மாறாக அவர்கள் மன்னாரில் இருக்கும் நில அளவை திணைக்களத்திற்கு மாறாக கொழும்பு தலைமையகத்தில் உள்ள நில அளவை திணைக்களத்தில் இருந்து ட்ரோன் மூலம் இப்பிரதேசத்தை அளப்பதற்கு குறித்த பகுதிக்கு சென்றுள்ளனர்.
நில அளவை
இந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில், பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன், மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை எஸ்.ஜெயபாலன் குரூஸ் அடிகளார், கடற்றொழில் அமைப்பு, பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் குறித்த பகுதிக்கு சென்றிருந்தனர்.
குறித்த நில அளவை திணைக்களத்தினர் மாஸ் மினரல் நிறுவனத்தினால் அழைத்து வரப்பட்ட நிலையில் அவர்கள் இங்கு வந்து நில அளவையை மேற்கொள்ள நடவடிக்கை முன்னெடுத்ததாக மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை எஸ்.ஜெயபாலன் குரூஸ் அடிகளார் தெரிவித்தார்.
உரிய முறையில் எவ்வித அனுமதியும் பெற்றுக் கொள்ளாமல் குறித்த பகுதிக்கு வருகை தந்து ரோன் கேமரா மூலம் நில அளவையை மேற்கொள்ள நடவடிக்கைகளை குறித்த குழுவினர் முன்னெடுத்தனர்.
அனுமதி
இந்த நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், குறித்த விடயம் தொடர்பாக இம்மாத இறுதியில் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும், அதன் பின்னர் இவ்விடயம் குறித்து தீர்மானம் எடுக்கப்பட்டதன் பின்னர் குறித்த நடவடிக்கையை தொடர்வதா? இல்லையா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பில் இருந்து வருகை தந்த நில அளவை திணைக்களத்தினர் குறித்த நடவடிக்கையை கைவிட்டுச் சென்றுள்ளனர். அதேவேளை குறித்த பகுதிக்குச் சென்ற மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களுடன் குறித்த குழுவினர் முரண்பாட்டில் ஈடுபட்டதாக கூற்படுகின்றது.
அதேவேளை, எதிர்வரும் 28 ஆம் திகதி இடம்பெறவுள்ள மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் நில அளவைக்கான அனுமதியை வழங்கப் போவதில்லை. இத்திட்டம் நடைமுறைப்படுத்தபடக் கூடாது.
இதனால் மன்னார் தீவு முழுமையாக பாதிக்கப்படும். எனவே கரையோர மணல் அகழ்வுக்கு மன்னார் மக்கள் ஒருபோதும் அனுமதி வழங்க மாட்டார்கள் என பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
