முல்லைத்தீவில் சிறுமியொருவர் மீது துஸ்பிரயோக முயற்சி! ஆசிரியரொருவர் கைது
முல்லைத்தீவு - உடுப்புக்குளம் பகுதியில் சிறுமி ஒருவர் மீது பாலியல் துஸ்பிரயோகத்திற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் வயோதிபர் ஒருவரை முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் - நெல்லியடியினை சேர்ந்த 72 அகவையுடைய ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் முல்லைத்தீவு,உடுக்புக்குளம் பகுதியில் உறவினர்களின் வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், அருகில் உள்ள மாணவி ஒருவருக்கு பாடம் சொல்லிக்கொடுப்பாத கூறி அவர் வசித்த வீட்டிற்கு அழைத்து சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகத்திற்கு முயற்சித்தமை உறவினர்களால் கண்டறியப்பட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து குறித்த வயோதிபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் முல்லைத்தீவு,வட்டுவாகல் பகுதியில் பெண் ஒருவரின் மூன்றாவது கணவனால் இரண்டு பிள்ளைகள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள் 19 நிமிடங்கள் முன்
வெற்றியின் சிகரத்தில் இருந்தாலும் மற்றவர்களை மதிக்கும் 3 ராசியினர்: யார் யார்ன்னு தெரியுமா? Manithan
பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேறிய யாருமே எதிர்ப்பார்க்காத ஒரு பிரபலம்... யார் தெரியுமா? Cineulagam