வனவளங்கள் அதிகாரி இடமாற்றம் பெற முயற்சி! பிரதியமைச்சர் ஒருவரின் அழுத்தமே காரணம் என தெரிவிப்பு
பிரதியமைச்சர் நாமல் கருணாரத்னவின் அழுத்தம் காரணமாக குருநாகல் வனவளங்கள் திணைக்கள பிரதான அதிகாரி இடமாற்றம் பெற்றுச் செல்லத் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குருநாகல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கஹல்ல பல்லேகெல பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் பொறுப்பதிகாரி சதுர குணரத்ன, அங்கிருந்து இடமாற்றம் பெற்றுச் செல்லத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடமாற்றம்
குறித்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தனது ஆதரவாளர்களுக்கு காணிகளை பகிர்நதளிப்பது தொடர்பில் கமத்தொழில் பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன அழுத்தம் கொடுப்பதன் காரணமாகவே வனப்பாதுகாப்பு அதிகாரி சதுர குணரத்ன அங்கிருந்து இடமாற்றம் பெற்றுச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்குறித்த கஹல்ல-பல்லேகெல வனப்பகுதியானது குருநாகல் மாவட்டத்தில் உள்ள யானைகளுக்கு பரிச்சயமான ஒரு வனப்பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா





இந்தியாவிற்கு கலக்கம் தரும் தகவல்... நெருங்கிய நண்பரிடமிருந்து மிகவும் மேம்பட்ட ஆயுதம் வாங்கிய பாகிஸ்தான் News Lankasri

வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கூலி படத்திற்காக நாகர்ஜுனா வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
