கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி
கேகாலை பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர் ஒருவரை கல்லால் தலையில் தாக்கி கொலைசெய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் கேகாலை, பல்லேகம,தீவெல பிரதேசத்தில் நடைபெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கேகாலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் பல்லேகம,தீவெல பிரதேசத்தை சேர்ந்த 47 வயதான எல கபில எனப்படும் சமன்குமார என்பவரே உயிரிழந்துள்ளார்.
போதைபொருள் விற்பனை

உயிரிழந்த நபர் ஐஸ், போதைபொருள் மற்றும் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் பிரதேசவாதியொருவருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது செங்கல்லினால் தலையில் தாக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக அதே பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் கைதுசெய்யப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan