பலஸ்தீன மக்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு சஜித் கடும் கண்டனம்
இஸ்ரேலின் அரச பயங்கரவாதம் மற்றும் பலஸ்தீன மக்களுக்கு எதிரான தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
‘பிரபஞ்சம்’ 285ஆவது SMART வகுப்பறை மட்டக்களப்பு, காத்தான்குடி பத்ரியா வித்தியாலயத்திற்கு வழங்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மனிதாபிமானமற்ற தாக்குதல்
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“நாங்கள் கண்டிப்பாக பலஸ்தீன மக்களுடன் இணைந்து நிற்போம். இஸ்ரேலின் அரச பயங்கரவாதம் மூலம் பலஸ்தீன மக்களுக்கு எதிரான மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நாம் கண்டிக்கிறோம்.
இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவிடம் கூற விரும்புகின்றோம்.
இந்த வருட இறுதிக்குள் இலங்கை பலஸ்தீன மக்களுடன் இரட்டைப் பேச்சு இல்லாமல் ஒன்றாக நிற்கும்.” என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan
