தாயின் கைகளை கட்டிவிட்டு 27 வயது மகள் கடத்தல்
காலி - உடுகம பகுதியில் 27 வயது பெண்ணொருவரை கடத்திச்சென்று தகாதமுறைக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உடுகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரதான சந்தேகநபர் மேலும் மூவருடன் சேர்ந்து பெண்ணின் வீட்டிற்கு வந்து தாயின் கைகளை கட்டிவிட்டு வாகனத்தில் அவரை கடத்திச்சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பெண்ணை கடத்திச்சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் செல்லகதிர்காமம் பகுதியில் வீடொன்றில் பெண்ணுடன் இருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில் வெளியான தகவல்
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 58 வயதுடைய தொடருந்து ஓட்டுநர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சந்தேகநபருடன் வந்த ஏனைய மூன்று சந்தேகநபர்களும் காலி, குருந்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கடத்தப்பட்ட பெண் ஒரு குழந்தையின் தாய் எனவும் அவரது கணவர் அவரை விட்டு பிரிந்து வாழ்கின்றமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
