முல்லைத்தீவு பகுதியில் வீடொன்றிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய கும்பல்:பொலிஸார் அசமந்தம்
முல்லைத்தீவு - மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருநகர் பகுதியில் கும்பலொன்று கடந்த 12ஆம் திகதி வீடொன்றிற்குள் புகுந்து தாய்,தந்தை மற்றும் மகன் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இதன்போது பாதிக்கப்பட்ட தரப்பினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்ட நிலையில் சம்பவம் தொடர்பில் இதுவரை பொலிஸார் எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மல்லாவி பகுதியைச் சேர்ந்த கும்பலொன்று தொடர்ச்சியாக பொதுமக்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக பொது மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது
தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் பல தடவை மல்லாவி பொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடுகளை செய்துள்ள போதும் அவை தொடர்பில் குறித்த நபர்களை கைது
செய்வதற்கோ அல்லது அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்காது சம்பவத்துடன்
தொடர்புபட்டவர்களுடன் நெருக்கமான உறவைப் பொலிஸார் பேணி வருவதாக அப்பகுதி பொதுமக்கள்
குற்றம்சாட்டியுள்ளனர்.





அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri

நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவி ஷோவிற்கு வந்த தொகுப்பாளினி டிடி... கலகலப்பான நிகழ்ச்சி, வீடியோ இதோ Cineulagam
