விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் மீது தாக்குதல்(Video)
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, விசுவமடு பகுதில் உள்ள விவசாயிகள் பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.
விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த காலங்களில் ஒரு கும்பல் குழப்பத்தினை ஏற்படுத்தி வருகின்றதாக கூறப்படுகிறது.
பெட்ரோலினை பெற்றுக்கொள்ள சென்றவர்கள் கியூ.ஆர் குறியீட்டினை காட்டியுள்ளார்கள். எனினும் அந்த கியூ.ஆர் குறியீட்டிற்கு ஏற்கனவே பெட்ரோல் வழங்கப்பட்டு விட்டதாக தெரியவந்துள்ளது.

தாக்கப்பட்ட முகாமையாளர், ஊழியர்
இதனை ஊழியர்கள் பாவனையாளர்களிடம் தெரிவித்த போது இல்லை பெட்ரோல் அடிக்க வேண்டும் என அடம்பிடித்த பாவனையாளர்கள் குழு முகாமையாளர் கதைத்து பேசிக்கொண்டு நின்ற போது திடீரென முகாமையாளர் மீதும், ஊழியர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
காயங்களுக்கு இலக்கான முகாமையாளர் மற்றும் ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
தாக்குதலில் ஏற்பட்ட சேதம்
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரண்டு பொலிஸார் கடமையில் இருக்கும் போதே இவ்வறான சம்பவம் பதிவாகியுள்ளதுடன் எரிபொருள் நிரப்பு நிலைய சொத்திற்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் கருத்து தெரிவிக்கையில்,
''ஒரு கும்பல் தவறான கியூ.ஆர் குறியீட்டினை கொண்டு வந்து பெட்ரோலினை தருமாறு அடம் பிடித்துள்ளார்கள்.
நிறுத்தப்பட்டுள்ள எரிபொருள் விநியோகம்

இதன்போது ஏற்பட்ட முரண்பாட்டில் ஊழியர் இருவர் மற்றும் கொள்வனவு முகாமையாளர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.
பொலிஸ் பாதுகாப்பு பேதியளவு இல்லாத நிலையில் எரிபொருள் விநியோகம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உரிய பாதுகாப்பும் பணியாளர்களுக்கான பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் இடத்தில் தான் நாங்கள் பணி
செய்யலாம்'' என தெரிவித்துள்ளார்.
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri