காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்: அமெரிக்கா வெளியிட்ட தகவல்-செய்திகளின் தொகுப்பு
காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இராணுவத்தினரின் தாக்குதல் நடாத்தியமைக்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் கவலை வெளியிட்டுள்ளார்.
இராணுவத்தினரின் குறித்த செயல் அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவியை ஏற்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றின் மூலம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடாத்தியமைக்கு கவலை வெளியிட்டுள்ளார்.நேற்று இரவு போராட்ட களத்திற்குள் அத்துமீறிய இராணுவத்தினர் ஆர்ப்பாட்டக்காரர்களை அடித்து விரட்டியுள்ளதுடன் அதில் பலர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலைநேர செய்திகளின் தொகுப்பு,





எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவனாந்தமை கொலை செய்ய காத்திருக்கும் அடியாட்கள்.. ஆதி குணசேகரன் போடும் திட்டம் Cineulagam

ட்ரம்பால் 25 பில்லியன் டொலர் வருவாயை இழக்கும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள ஆசிய நாடொன்று News Lankasri
