சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக செயற்பட்ட சமூக செயற்பாட்டாளர் மீது தாக்குதல்
கிளிநொச்சி - தர்மபுரம், உழவனூர் பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிராகச் செயற்பட்டுவந்த சமூக செயற்பாட்டாளர் ஒருவர் மீது சுண்டிக்குளம் இராணுவ சோதனைச் சாவடிக்கருகில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடும் குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன்போது அவரது முச்சக்கரவண்டி அடித்து சேதமாக்கப்பட்டுள்ளதோடு, அவரும் காயமடைந்த நிலையில் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
உழவனூர், கல்லாறு பகுதிகளில் தொடர்ச்சியாகக் கட்டுப்பாடின்றி சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது. எனவே இதற்கு எதிராகத் தாக்குதலுக்குள்ளான சமூக செயற்பாட்டாளர் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்ததுடன், சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் பல இடங்களில் முறையிட்டும் வந்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த சமூக செயற்பாட்டாளர் மீது கடந்த சனிக்கிழமை மதியம் எழு பேர் கொண்ட குழுவினர் சுண்டிக்குளம் - கல்லாறு வீதியில் இராணுவச் சோதனை சாவடிக்கருகில் வைத்துத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதோடு, அவர் பயணித்த அவரது முச்சக்கரவண்டியையும் அடித்து உடைத்துள்ளனர்.
இதன்போது காயமடைந்த அவர் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
எனவே இது தொடர்பில் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் தெளிவாகக் குறிப்பிட்டு முறையிட்டும் பொலிஸார் இன்று வரை எவரையும் கைது செய்யவில்லை. ஆனால் தாக்குதல் மேற்கொண்டவர்கள் பொது இடங்களில் பகிரங்கமாக நடமாடித் திரிகின்றனர் எனச் சம்மந்தப்பட்டவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராகக் குரல் கொடுக்கின்ற ஒரு சிலர் மீது
தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக பொலிஸார் எவ்வித நடவடிக்கையும்
எடுக்காதிருப்பது சமூக விரோத செயற்பாடுகளை ஊக்குவிப்பதாக அமைவதற்கு
வழிவகுக்கும் என்பதோடு, சமூக விரோத செயற்பாடுகளுக்கு எதிராகக் குரல்
கொடுப்போரையும் சமூகத்திலிருந்து காணாமல் ஆக்கிவிடும் என பொதுமக்களும்
கவலை தெரிவித்துள்ளனர்.





ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam

இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri
