யாழில் நபரொருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்: பிரதான சந்தேகநபர் கைது
யாழ்ப்பாணத்தில் தொலைபேசி விற்பனை நிலையமொன்றின் உரிமையார் மீது கடந்த ஆகஸ்ட் மாதம் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று (04.11.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நான்கு பேர் கொண்ட குழுவொன்றே இந்த வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

பிரதான சந்தேகநபர் கைது
இந்த வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்த சந்தேக நபரொருவர் ஏற்கனவே நீதிமன்றில் சரணடைந்த நிலையில், பிரதான சந்தேகநபரையும் ஏனையவர்களையும் பொலிஸார் தேடி வந்துள்ளனர்.
பிரதான சந்தேக நபர் நேற்றைய தினம் யாழ். நகரப் பகுதியில் நடமாடிய போது, யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 10 மணி நேரம் முன்
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
சன் டிவியில் புனிதா, மணமகளே வா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... ரசிகர்கள் ஷாக் Cineulagam