முல்லைத்தீவில் இராணுவத்தினர் அட்டகாசம் - இளைஞன் மீது தாக்குல்
முல்லைத்தீவில் முகக் கவசம் அணியாத இளைஞன் மீது இராணுவனத்தினர் தாக்குதல் மேற்கொண்டமையினால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைப்பாலை சந்தியில், இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆனந்தபுரம் பகுதியில் இருந்து வைத்தியசாலைக்கு செல்வதற்காக இரணைப்பாலை சந்திக்கு, குறித்த இளைஞன் மாஸ்க் அணியாது சென்றுள்ளார். இதன்போது, அப்பகுதியில் கடமையில் இருந்த இராணுவ வீரர் ஒருவர், அவ்விளைஞனை அழைத்து, முகக் கவசம் அணியுமாறு கூறி தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
இதனையடுத்து அங்கு கூடிய மக்கள் கூடியமையினால் பதற்ற நிலை ஏற்பட்டது. முகக் கவசம் அணியாமைக்கு இராணுவத்தினர் தாக்கும் அதிகாரம் உள்ளதாக என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு வருகை தந்த புதுக்குடியிருப்பு பொலிஸார், குறித்த இடத்திலிருந்து பொதுமக்களை அப்புறப்படுத்தி, நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இச்சம்பவம் தொடர்பில், பாதிக்கப்பட்ட இளைஞன், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்து, புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு, சிகிச்சை பெறச் சென்றுள்ளார்.





கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல சீரியல் நடிகர்கள்... எந்த ஜோடி பாருங்க Cineulagam

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam
