யாழில் பிரசார கூட்டத்திற்கு செல்வதற்கு தயாரான இளைஞன் மீது தாக்குதல்
யாழில் பிரசாரக் கூட்டம் ஒன்றிற்கு செல்வதற்கு தயாரான இளைஞன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவமானது நேற்று(20.10.2024) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
“மூளாய் - வேரம் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞன் வலிகாமம் மேற்கு பகுதியில் நேற்று மாலை நடைபெற்ற பிரசார கூட்டத்திற்கு செல்வதற்கு தயாராகியுள்ளார்.
பொலிஸார் விசாரணை
இதன்போது அங்கிருந்த மற்றொரு நபருக்கும் குறித்த இளைஞனுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்ட நிலையில் அது தாக்குதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் தலையில் காயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, வட்டுக்கோட்டை பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: சட்டென பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்! ஒட்டுமொத்த வீடும் கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட மாற்றம்... முழு விவரம் Cineulagam