கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவி மீது தாக்குதல்! மாணவனுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவி மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மாணவன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த உத்தரவானது நேற்று(13) ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்று வரும் முதலாம் ஆண்டு மாணவி மீது கடந்த 09.10.2025 வியாழக்கிழமை இரவு 9.45 மணியளவில் 3 ஆண்டில் கல்வி கற்று வரும் மாணவன் விடுதி பகுதியில் வைத்து கன்னத்தில் தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
பிணை
இதனையடுத்து, மாணவி மீது தாக்குதல் நடத்திய பொலன்னறுவையை சேர்ந்த மாணவனை நேற்று(13) பொலிஸார் கைது செய்தனர்.
இதன்போது, கைது செய்யப்பட்ட மாணவனை நேற்று ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவரை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்து எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கட்டனை பிறப்பித்து உத்தரவிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பிணைக் கைதிகள் உடல்களை ஒப்படைப்பதில் சிக்கல்: ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு News Lankasri

Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
