சாணக்கியனை தாக்க முயன்ற மொட்டு எம்.பி - பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆளும் கட்சி - எதிர்க்கட்சி என எந்தக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தினாலும் உடல் ரீதியான காயங்களையோ அல்லது தாக்குதலையோ மேற்கொள்ள எந்த உரிமையும் இல்லை என அவர் சுட்டிக்காட்டினார் .
எதிர்க்கட்சித் தலைவர் இன்று (07.3.2024) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் பிரதமரைச் சந்திக்கச் சென்ற வேளை அவர் மீது நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தாக்குதல் நடத்த முயற்சித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு மிகவும் பாரதூரமானது.
நாடாளுமன்றத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை சபாநாயகர் தலைமையிலான அதிகாரிகளே பாதுகாக்கின்றமையினால், இது குறித்து கவனம் செலுத்தி அவரது பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பில் முறையான விசாரணையை நடத்துமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |