இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்!
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று மாலை வியாழேந்திரனின் வீட்டுக்கு அருகில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அப்பகுதியில் பெருமளவானோர் ஒன்றுகூடி குறித்த துப்பாக்கி சூட்டிற்கு எதிராக கோசங்களை எழுப்பி வருகின்றனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலை நிலவி வருகின்றதுடன்,பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் பொலிஸ் மெய்பாதுகாவலர் ஒருவரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில்,இதில் படுகாயமடைந்த நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam