சிறைக்காவலர் மீதான தாக்குதலுக்கு உதவிய சிறைச்சாலை அதிகாரி
கொழும்பு - மகசீன் புதிய விளக்கமறியல் சிறைச்சாலையின் சிறைக்காவலர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய மூவர், அந்த தாக்குதலை நடத்துவதற்கு மற்றுமொரு சிறைச்சாலை அதிகாரியிடம் உதவி பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் குறித்த காவலரை தாக்குவதை காணொளிப்படுத்தி, வெளிநாட்டில் வசிக்கும் ஹண்டயா என்ற பாதாள உலக குழுவுக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் டி-56 துப்பாக்கி, இரண்டு பிரவுனிங் பிஸ்டல் மற்றும் 167 தோட்டாக்களுடன், இலங்கை இராணுவத்தின் கெப்டன் உட்பட இருவர் நுவரெலியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறைக்காவலர்
கடந்த மே 12 ஆம் திகதி, புதிய விளக்கமறியல் சிறைச்சாலையின் சிறைக்காவலர் சங்க குசல் மாரசிங்க மினுவாங்கொடையில் உள்ள அவரது வீட்டில் வைத்து தாக்கப்பட்டார்.
இந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றது. சிறைச்சாலைக்குள் பல வெற்றிகரமான சோதனைகளுக்கு மாரசிங்க பொறுப்பாளியாக இருந்தார் என்ற அடிப்படையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |